ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி  திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சீமானுக்கு எதிராக நீதி கேட்டு பலரிடம் போராடியதாகவும், ஆனால் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தன்னை விபாச்சாரி போன்ற வார்த்தைகளால் சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், சீமானின் தொடர் டார்ச்சர்கள் தாங்காமல் தற்கொலைக்கு செய்து கொள்ள போவதாகவும், இதுவே தனது கடைசி வீடியோ என்றும் தெரிவித்திருந்தார்.

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமியிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினர். அப்போது சீமான், ஹரி நாடாரின் தூண்டுதலின் பேரில் சதா நாடார் என்பவர் தன்னை மிரட்டியதாக நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் சதா நாடார் மீது கொலை வழக்கு, பெண்ணை களங்கப்படுத்தும் வகையில் பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.