பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நேற்றைய நிகழ்ச்சியின் போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கிறார் விஜயலஷ்மி. சென்னை 600028 திரைப்படம் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து நடித்த எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பிறகு சமீபத்தில் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார்.  ஏதோ பிரச்சனை காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிய அவர் தற்போது பிக் பாஸ் வீட்டினுள் வந்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி மூலம் நிரைய பட வாய்ப்புகள் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் தான் சக போட்டியாளர்களை போல இவரும் இங்கு வந்திருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் எந்த பிரபலமும் ஓவியா அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெறவில்லை. 

புதிதாக வந்திருக்கும் இவருக்காவது அப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என தெரியவில்லை. ஆனால் சரியான முறையில் நடந்து கொண்டால் பிந்து மாதவியின் இடத்தை வேண்டுமானால் இவரால் பிடிக்க முடியும்.
 இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு நடக்கும் விஜயலஷ்மி பிக் பாஸ் வீட்டில் சில போட்டியாளர்களிடம் ஒதுக்கம் காட்டி இருக்கிறார் என தெரிகிறது. 

சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிரமோவில் மஹத் ஐஸ்வர்யாவிடம் “அவ நம்மள அவாய்ட் பண்றா” என கூறி இருக்கிறார். இந்த இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் படி மஹத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இந்த மூவரையும் விஜயலஷ்மி ஒதுக்கியதாக தெரிகிறது.
 அதே சமயம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைப்பதாக கூறிய டேனியிடம் நீங்க ஜெயிக்க தானே வந்தீங்க பிறகு எதுக்கு இங்க இருந்து போகனும்னு சொல்றீங்க என கேள்வி எழுப்பி இருக்கிறார். 

இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். கொஞ்சம் தைரியமான பொண்ணு நான் என வழக்கமாக கூறும் விஜயலஷ்மி இங்கு வந்ததே ஐஸ்வர்யாவின் கொட்டத்தை அடக்க தானா? இனி நடக்க போவது என்ன என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.