Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியின் 'மதுரவீரன்' ரிலீஸ் தேதி இதோ...!

vijayakanth son movie release date announced
vijayakanth son movie release date announced
Author
First Published Jan 19, 2018, 6:52 PM IST


'சகாப்தம்' படத்தை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மதுரவீரன்' கிராமத்து கதைக்களத்தில், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

vijayakanth son movie release date announced

பிஜி.முத்தையா இயக்கியுள்ள இந்த படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் உலாவருகிறது.

vijayakanth son movie release date announced

சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், மீனாட்சி என்கிற அறிமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios