தளபதி விஜய் நடித்துவரும் 64ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.   

அதன் படி, இன்று 5 மணிக்கு தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வரும் 64 ஆவது படத்தின் பெயர் 'மாஸ்டர்' என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் விஜய் தலையில் கை வைத்திருக்கும், போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதனை, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இப்போதே நியூ இயர் கொண்டாட்டத்தை துவங்கி விட்டனர்.  

இந்த படத்தை, தளபதியின் உறவினர் ஜான் பிரிட்டோ XB கிரேஷன்ஸ் சார்பாக மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.  விஜய்க்கு  ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் முதல் முறையாக நடித்து வருகிறார். 

மேலும் விஜய்க்கு அதிரடி வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது கூடுதல் சிறப்பு.  முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மனதை ப்ளாஸ்ட் பண்ணும் மாஸ்டர்... ஃபர்ஸ்ட் லுக் இதோ...