பீஸ்ட் படம் பார்க்க வந்து விபத்தில் மரணமடைந்த ரசிகருக்கு இரங்கல் சொல்ல மாட்டீங்களா.? நடிகர் விஜய்க்கு கேள்வி!

மகனை இழந்து தவிக்கும் ரசிகர் கவுசிக்கின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை ஒரு இரங்கல் செய்தியோ, ஆறுதலான வார்த்தைகளோகூட அறிக்கையாக வெளியிடப்படாதது வேதனையின் உச்சம்.

Vijay will you not mourn the fan who came to see the movie Beast and died in an accident? A reasonable question!

தங்களின் வாழ்வாதாரமாக திகழும் ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடிக்கும் படம் மூலம் கோடி, கோடியாய் பணம் வந்து கொட்டினால் மட்டும் போதும் நினைக்கும் ஒரு சில நடிகர்கள் இருப்பது திரையுலகின் சாபக்கேடு என்று தமிழக பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர் பலி

Vijay will you not mourn the fan who came to see the movie Beast and died in an accident? A reasonable question!

‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பு, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை நல்வழிப்படுத்தாத நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தமிழக போலீஸூக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் ‘பீஸ்ட்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பொன்னுசாமி மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர் விஜய் நடிப்பில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடந்த 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்பு காட்சியை ராமநாதபுரத்தில் உள்ள திரையரங்கில் காண முன்பதிவு செய்து, தனது நண்பர்களுடன் சென்ற கோவையைச் சேர்ந்த கவுசிக் என்கிற ரசிகர் ஓட்டிச் சென்ற கார், விபத்தில் சிக்கி அவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.

Vijay will you not mourn the fan who came to see the movie Beast and died in an accident? A reasonable question!

ஆறுதல் வார்த்தை இல்லை

அவரோடு உடன் சென்ற நண்பர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது நடிப்பில் வெளியான திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காணச் சென்ற ரசிகரின் வாகனம் விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததோடு உடன் சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகனை இழந்து தவிக்கும் ரசிகர் கவுசிக்கின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை ஒரு இரங்கல் செய்தியோ, ஆறுதலான வார்த்தைகளோகூட அறிக்கையாக வெளியிடப்படாதது வேதனையின் உச்சம்.

Vijay will you not mourn the fan who came to see the movie Beast and died in an accident? A reasonable question!

ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
 
தங்களின் வாழ்வாதாரமாக திகழும் ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடிக்கும் படம் மூலம் கோடி, கோடியாய் பணம் வந்து கொட்டினால் மட்டும் போதும் நினைக்கும் ஒரு சில நடிகர்கள் இருப்பது திரையுலகின் சாபக்கேடு. ஒருபுறம் டாஸ்மாக் கடைகளின் வெளிச்சத்திலும், மறுபுறம் திரை வெளிச்சத்திலும் மின்மினிப் பூச்சிகளாய் தங்களின் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைய சமுதாயம் இனியேனும் தங்களின் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒரு கனம் சிந்தித்துப் பார்த்து தங்களை திருத்திக் கொள்ள முன் வர வேண்டும். இல்லை நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் இளைய சமுதாயத்தையும், அடுத்த தலைமுறையையும் அந்த ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.” என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios