vijay visiting anitha home seran share opinion
சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என நினைத்து, +2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மத்திய அரசின் நீட் தேர்வு திணிப்பால் மாணவி அனிதாவின் மருத்துவராகவேண்டும் என்கிற கனவு கனவாகவே நின்றுவிட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் வரை சென்றும் அனிதாவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இவரது மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையே கலங்க செய்தது. மேலும் அனிதாவின் மரணத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் கௌதமன், சீமான், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இளையதளபதி விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அனிதாவின் படத்திற்கு மலர் தூவி, மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலிசெலுத்தி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
தற்போது இந்த தகவலை பார்த்த சேரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விஜய், அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது. ஆனால் பாராட்டமாட்டேன்... ஏனெனில் இது உங்கள் கடமை, தொடருங்கள் என பதிவு செய்துள்ளார்.
