விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் குமார் நடித்த துணிவு படமும் கிட்டத்தட்ட 480 திரையரங்களை கைப்பற்றியுள்ளன.

அஜித் குமார் நடித்த துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் நிலையில், விஜய் நடித்த வாரிசு படம் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டுகளுக்கு முன்னதாக விஜய் நடித்த ஜில்லா படமும், அஜித் நடித்த வீரம் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2014 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு துணிவு படமும், வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் வெளியாகிறது.

ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை: ஏன் அஜித் குமார் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை தெரியுமா?

வாரிசு மற்றும் துணிவு படத்தில் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆகையால், இரு படங்களுமே 480 திரையரங்குகளில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்திற்கான திரையரங்கு ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்த பணிகள் 40 நாட்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டன. இதனால், வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என்று செய்திகள் வெளியாகின. இரு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று விநியோகஸ்தர்கள் உறுதிபடுத்தினர். இதையடுத்து இரண்டு படங்களும் தமிழகத்தில் சம எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அந்தர் பல்டி அடித்த சரத்குமார்: அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான், அமிதாப் பச்சனும் சூப்பர் ஸ்டார் தான்!

இதன் காரணமாக துணிவு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்த திரையரங்குகள் தற்போது வாரிசுக்கு மாறி வருகின்றன. அதே போன்று ஒரேயொரு திரையரங்கு கொண்ட ஊர்களில் வாரிசு, துணிவு இரண்டிற்கும் இரண்டு காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இரு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த பிரச்சனையும் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கதையை வைத்து பார்க்கும் போது எந்த படம் சிறந்த படம் என்பதில் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதும், சண்டையிட்டுக் கொள்வதும் நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழகம் முழுவதும் 1 மணிக்கு வெளியாகும் துணிவு: வாரிசுக்கு 4 மணி தான்!

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹெச் வினோத் - அஜித் குமார் கூட்டணியில் 3ஆவதாக உருவாக்கப்பட்டுள்ள படம் துணிவு. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப படமும் மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப், ஸ்டைலும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் இரவு 12 மணிக்கு திரையிடப்படும் துணிவு!

இதே போன்று வாரிசு படம் குடும்பக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, குஷ்பு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, ஷாம், ஸ்ரீகாந்த்ம், பிரபு, ஜெயசுதா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேஷ், ஜான் விஜய், சதீஷ், சுமன், சஞ்சனா சாரதி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

AK 62 படத்தில் தரமான நடிகரை அஜித்துக்கு வில்லனாகும் விக்கி! ஹீரோயின் குறித்து வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்!