vijay tv seriyal actress rakshitha about husband bad habbit

'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா, தற்போது இதோ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரவணன் மீனாட்சி' என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பல இளைஞர்கள் தீவிர ரசிகர்கள்.

சீரியலை தாண்டி இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், 'உப்புகருவாடு' படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்காததால் சீரியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு 'பிரிவோம் சிந்திப்போம், சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்கை ஸ்மூத்தாக சென்றுக்கொண்டிருந்தாலும் தினேஷிடம் உள்ள கெட்டப்பழக்கத்தால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறதாம்.

தினேஷிடம் உள்ள அந்தக் கொட்டப்பழக்கம் குறித்து ரக்ஷிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் தினேஷ் புகைபிடிப்பது தனக்கு சுத்தமாக பிடிக்காது என்றும் இதனால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் என்றும் கூறியுள்ளார். 

இந்த பழக்கத்தை மாற்ற ரக்ஷிதா பல முயற்சிகள் செய்தும் எல்லாமே வேஸ்ட் ஆகிடுச்சாம்...!