மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சட்டம் சொல்வது என்ன?' என்கிற நிகழ்ச்சியின் மூலம், முதல் முதலில் தொகுப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் சித்ரா. பின்னர் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க, ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், சின்ன பாபா, பெரிய பாபா, சரவணன் மீனாட்சி, வேலூனாட்சி போன்ற போன்ற சீரியல்களில் நடித்தார். 

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, சித்ரா, ஹேமா ராஜ்குமார், குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். Pandiyan Store Chitra இந்த தொடரில் முல்லை – கதர் ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் தான் முல்லை சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த வீடியோ மற்றும் போட்டோ கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.  

இந்நிலையில் சீரியல் நடிகை  சித்ரா தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என்ற வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தியாளராகவும் சித்ரா தோன்றி பேசியுள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லை கதாபாத்திற்கும், முல்லைக்கு அண்ணி கதாபாத்திரத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாக முல்லையாக நடித்து வரும் சித்ரா பிரச்சனையை விவரித்து கூறியுள்ளார்.  டமுக்கு டப்பா டீவி என்ற பெயரில்  பிரேக்கிங் நீயூஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் செய்திவாசிப்பாளர், ரிப்போர்ட்டர் என மாறி, மாறி முல்லை பேசியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ... 

View this post on Instagram

Camera man @venkat_renganathan

A post shared by Chithu Vj (@chithuvj) on Sep 8, 2020 at 11:33pm PDT