கொரோனாவின் தாக்கத்தை தமிழகத்தில் வளர விட கூடாது என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கை கோர்த்து, மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் போன்ற பலர் தூக்கம் இன்றி இரவு பகலாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இப்படி பாடுபடும் இவர்களை, கொரோனாவில் இருந்து காப்பாற்றும் விதமாக, இவர்களுக்கு தேவையான மாஸ்க், சானிடைசர், மற்றும் தேவையான பொருட்களை பலர் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில், திருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மாஸ்க், கிருமி நாசினி, சானிடைசர், ப்ளீச்சிங் பவுடர் போன்றவற்றை வழங்கியுள்ளார் சின்னத்திரை நடிகர் குமரன்.

இவர் வேறு யாரும் இல்லை, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் நடித்து வரும் கதிர் தான். 

மக்களை காப்பாற்றும்  நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பயன்பெறும் வகையில் சின்னத்திரை நடிகர் குமரன் இந்த உதவியை வழங்கியுள்ளார்.  இந்த உதவிகளை அவர் வழங்கிய போது நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியே வர பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.