விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். விஜய் டி.வி. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். என்ன தான் கலாய்த்தாலும், குழந்தை போல் சிரித்து கொண்டு அதை என்ஜாய் செய்வது தான் ஜாக்குலின் ஸ்பெஷல். 

சின்னத்திரையை தாண்டி,  ஜாக்குலின் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், கிடைத்த சீரியல் ஹீரோயின் வாய்ப்பை கிள்ளியாக பயன்படுத்தி கொண்டு, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் 'தேன்மொழியாக' வந்து கவர்ந்துவிட்டார். 

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பது போல், ஜாக்குலினும் வீட்டிலேயே முடங்கியுள்ளார். 

வீட்டில் போரடிக்கும் போதெல்லாம்,  ஏதாவது செய்து வரும்... இவர், தேன்மொழி சீரியலின் படப்பிடிப்பின் போது, பம்பு செட்டில் பாட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகையுடன் தொட்டிக்குள் இறங்கி குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கோடைக்கு இதமாக நிஜமாக குளிக்கமுடியவில்லை என்றாலும், இதை பார்த்து பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்கிறார் போல ஜாக்...

கிராமத்து ஸ்டைலில் புடவையோடு தொட்டிக்குள் அமர்ந்து ஜாக்குலின் குளிக்கும் வைரல் வீடியோ இதோ...

 

View this post on Instagram

Kulichitu erukom 🤪🤪 #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on Apr 20, 2020 at 3:31am PDT