கஜா புயலின் கோர தாண்டவத்தால் ஒரே நாளில் பலர் தங்களின் 20 வருட உழைப்பை இழந்துள்ளனர். மரம், செடி, கொடி, வீடு என அனைத்தும் ஒரு நாள் இரவில் இயற்கையால் சூறையாடப்பட்டது. 

இதில் இருந்து பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் மீண்டு வர, ஒரு பக்கம் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டாலும். அது தற்சமயத்திற்கான தீர்வு தானே தவிர முழுமையாக மக்கள் இந்த துயரத்தில் இருந்து வெளிவர சில காலங்கள் ஆகும். 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷினி என்கிற குழந்தையின் வீடும் கஜா புயலால் சுவர் சரிந்து விழுந்து தரைமட்டமானது.  

இப்போது இந்த குழந்தை அவருடைய பெற்றோருடன் ஒரு பள்ளியில் தான் தங்கியுள்ளாராம். ஆனாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என பாட வந்துள்ளார். அவர் வீடு இழந்த விஷயத்தை நிகழ்ச்சியில் கூற அரங்கமே மௌனத்தில் ஆழ்ந்துவிட்டது.

அதோடு பாடகி சித்ரா மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து வீடு கட்டி தருவதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.