உன்னை அதிகமாக நேசிக்கிறேன்... சென்று வா அண்ணா... விஜய் டிவி பிரபலம் உருக்கமான பதிவு..!!

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த, ஆனந்த கண்ணனின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், இவருடைய இழப்பு குறித்தும், இவருடன் பழகிய தருணத்தையும் கூறி 'சென்று வா அண்ணா' என தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார், பிரபல பாடகியும், விஜய் டிவி பிரபலமுமான என்.எஸ்.கே ரம்யா.
 
vijay tv fame emotional words shared by anandha kannan

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்.எஸ்.கே ரம்யா கூறியுள்ளதாவது,  "ஆனந்த கண்ணன் என் சகோதரர், தந்தை, நலம் விரும்பி மற்றும் ஒரு நண்பரை விட கூடுதலாக என் மீது அக்கறை கொண்டவர். அவர் தான் எனக்கு எல்லாமே.... நான் அவருடன் என் மகிழ்ச்சியையும்,  வலியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் எப்படி வாழ வேண்டும், பிறரை எப்படி நேசிப்பது என்று எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

vijay tv fame emotional words shared by anandha kannan

தன்னுடைய கணவர், நடிகர் சத்யாவை திருமணம் செய்ய நான் அவருடைய சம்மதத்தை பெற்ற பின்பே முடிவு எடுத்தேன். சில சமயங்களில் என அம்மா என்னை பற்றி அவரிடம் மிகச்சிறிய  விஷயங்களுக்காக புகார் செய்துள்ளார். அப்போதெல்லம் ரம்யா என் சகோதரி, அவளை பற்றி அப்படி சொல்லாதீர்கள், அவள் அப்படி இல்லை என எனக்காக எப்போதும் என்னுடன் நின்று பேசியவர்.

vijay tv fame emotional words shared by anandha kannan

அவர் இல்லை என்பது மிகவும் வேதனையான தருணம், என்னுடைய பதிவுகளை அவர் உயிருடன் இருந்து படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தவர். நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர் அவர். மிகவும் நேர்மையான மனிதர். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். மக்கள் அவரை அடையாளம் கண்டு அவருக்கு ஹாய் சொல்ல அல்லது படம் எடுக்க விரும்பும்போது, ​​அவர்கள் தயங்குவார்கள், அவர் அவர்களிடம் சென்று அவர்களை மகிழ்விப்பதற்காக பேசுவார். என்றுமே பந்தா செய்தது இல்லை. 

vijay tv fame emotional words shared by anandha kannan

அவர் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை, என்னால் உன்னை இனி பார்க்க முடியாதா அண்ணா.... அண்ணா உங்களுக்காக சொர்க்கத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு. நீங்கள் எப்போதும் என்னிடம் சொல்வது போல் "உன்னை அதிகமாக நேசிக்கிறேன்". என கூறியுள்ளார் இவரது இந்த பதிவு படிப்பவர்கள் நெஞ்சங்களையே உருக்கும் விதத்தில் உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios