விஜய் டிவி, தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, நிகழ்ச்சியின் மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது தொகுப்பாளி, காமெடி நடிகை என, அவதாரம் எடுத்து பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. மாரி 2, கோலமாவு கோகிலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது விஜய் டி.வி.யில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அறந்தாங்கி நிஷாவிற்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பச்சிளங்குழந்தையுடன் வந்த நிஷாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

நிஷாவின் பெண் குழந்தைக்கு இஸ்லாமிய முறைப்படி பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் மைனா நந்தினி, கிரேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெள்ளை நிற உடையில் குட்டி தேவதை போல் இருக்கும் குழந்தைக்கு தேன் தொட்டு வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.