அடிக்கடி ஊர் சுற்ற சென்று விடுவதால் பிரியங்காவிற்கு பதில் நந்தினியை தொகுப்பாளராக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது...
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரபல தொகுப்பாளினியான வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு தமிழகத்தில் பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சினிமா பிரபலங்களை விட, சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றே கூறலாம். அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளினிகளில் டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய காமெடியான பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா.சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரியங்கா, நூலிழையில் டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து ரன்னராக வெளியேறினார். இருப்பினும் அந்நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கிய போட்டியாளர் இவர்தான். இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரியங்கா பிக்பாஸ் சென்றதால் அவர் ஆங்கர் செய்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார். இருப்பினும் பிரியங்கா எப்போது வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த 1 வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் 5 நண்பர்கள் பாவ்னி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை கூட யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். பிரியங்காவின் இந்த திடீர் பயணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழுவுக்கு அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் மைனா கோ ஆங்கராக இறக்கப்பட்டார்..இவ்வாறு பிரியங்கா அடிக்கடி நன்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதால் கடுப்பான விஜய்டிவி நிறுவனம் மைனா நந்தினியை சூப்பர் சிங்கர் ஷோவுக்கு ஆங்கராக்க முடிவு செய்துள்ளாராம்..
