vijay tv contestant arrest for second marriage issue

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு, தன்னுடைய பல குரல் பேசும் திறமையால் ரசிகர்களிடம் பிரமலமானவர் நவீன். தற்போது பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர், நவீன். கடந்த 2016ஆம் ஆண்டில் திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து, அதை அரக்கோணம் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரியை இன்று திருமணம் செய்ய இருப்பதாக, நேற்று முதல் மனைவியான திவ்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதற்கான ஆவணங்களையும் காவல் நிலையத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆடம்பர விடுதியில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார், நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.