முடக்கி போட்ட கொரோனா:

உலக நாடுகளை அடுத்து, இந்தியாவையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல், பாமர மக்கள் வரை அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

மேலும், கொரோனா வைரஸில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும் போது, முகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்றும், முடிந்த வரை அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா கொடுத்த மாற்றம்:

கொரோனாவால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், ஒரு சிலருக்கு வீட்டில் வெகு நாட்கள் இருப்பது ஒரு மாற்றத்தை கொடுத்துள்ளது.

மிகவும் பிஸியாக குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத பலர், இந்த ஓய்வை அன்பான குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்கள். 

அதே போல் வீட்டு வேலை செய்து பல வருடங்கள் ஆன பிரபலங்கள் கூட மீண்டும் தங்களுடைய வீட்டு வேலைகளை அவரவரே கவனித்து வருகிறார்கள்.

கலக்க போவது தீனா:

அந்த வகையில் கலக்க போவது காமெடி ரியாலிட்டி ஷோ மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் தன்னுடைய காமெடியால் கலக்கி வரும், தீனா... தன்னுடைய வீட்டில் உள்ள மாட்டை மேய்க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு... வீட்டு வேலை செய்து எவ்வளவு நாள் ஆகிறது என கூறியுள்ளார்.

தீனா நடிப்பில் கடைசியாக, கைதி படம் வெளியானது. இதில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on Apr 4, 2020 at 2:07am PDT