பிக்போஸ் நிகழ்ச்சியின் இன்று என்ன பிரச்சனைகள் நடைபெற உள்ளது என்பதை, விவரிக்கும் விதத்தில் இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ மூலம், கடந்த இரண்டு நாட்களாக ஆண் போட்டியாளர்களை எஜமான்களாக பாவித்து அவர்களுக்கு பணிவிடைகள் செய்து வந்த பெண் போட்டியாளர்கள் ரோல் மாற்றப்பட்டுள்ளது. 

பெண்கள் அனைவரும் இன்று முதல் ஆண்களை வேலை வாங்குகிறார்கள். இதனால் கணவன் - மனைவி நித்யா மற்றும் பாலாஜிக்கு பிரச்சனை உருவாகிறது. 

அதேபோல் எப்போதும் அனைவரிடமும் மிகவும் ஜாலியாக பேசும் டானி இன்று, முதல் முறையாக பெண் போட்டியாளர்களை பார்த்து, உங்களை நீங்களே... அசிங்கமாக தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்றும், பாஸ் என்றால் பாஸ் மாதிரி நடந்துக் கொள்ள வேண்டும் அரை மெண்டல் மாதிரி நடந்துக்கொள்ள கூடாது என்றும் மஹத் கூறுகிறார்.