என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என உறுதி அளிக்கிறார் கோபி..

இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில்.. வீட்டிற்கு வரும் ஏழில் தன்னை தயாரிப்பாளர் தன் இஷ்டத்திற்கே படத்தை உருவாக்குமாறு கூறிவிட்டார் என மிகவும் சந்தோசமாக தெரிவிக்கிறார். அதோடு இந்த விஷயத்தை அமிர்தாவுக்கும் போன் செய்து கூறுகிறார். ஆனால் வர்ஷினி உடன் பைக்கில் வந்த விஷயத்தை சொல்ல மறந்து விடுகிறார் எழில். இதனால் குழப்பம் அடையும் அமிர்தா. ஏன் இதை சொல்லாமல் விட்டார் ஒரு வேலை அவர் மனதில் நாம் சரியாக இடம் பிடிக்கவில்லையோ என ஒரே குழப்பம் அடைகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மீண்டும் போன் செய்யும் ஏழில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் உங்கள் வீட்டு வழியாகத்தான் வந்தேன் என வர்ஷினுடன் வந்த விஷயத்தை கூறுகிறார். இதனை அடுத்து நிம்மதி அடைகிறார் அமிர்தா. இந்தப்பக்கம் ராதிகா மிகவும் சோகமாக அமர்ந்திருக்க அவரது அண்ணன் என்ன விஷயம் என கேட்கிறார். திருமணம் சரியாகத்தானே நடக்கும் அண்ணா என கவலையுடன் கேட்கிறார் ராதிகா. எல்லாம் சரியாகத்தான் நடக்கும் நீ இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறுகிறார் ராதிகாவின் அண்ணன்.

மேலும் செய்திகளுக்கு...அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..


அப்பொழுது வரும் கோபியிடம் ராதிகாவின் தாயார், நீங்கள் திருமணம் குறித்து உங்கள் வீட்டில் யாரிடமாவது கூறினீர்களா? என கேட்க என் அம்மாவிடம் கூறினேன் எனக் கூறுகிறார் கோபி. உங்க அம்மாவிடமா? அவர் போதும் முன்னதாக வீட்டிற்கு வந்து எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? கண்டிப்பாக அவர் திருமணத்தை நடத்த விட மாட்டார் என பயப்படுகிறார் ராதிகாவின் தாய். உடனே கோபி அம்மா அப்படியெல்லாம் செய்யமாட்டார். நான் என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டியே திருவேன் என உறுதி அளிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு....அட ஹனுமான் படத்தில் வருவது திருச்சிற்றம்பலம் நாயகி நித்யாமேனனா? சிறு வயதில் எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க..

மறுபுறம் பாக்கிய தனது வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு ரிசப்ஷனுக்கு சமைக்க கல்யாண மண்டபத்திற்கு கிளம்புகிறார். ஜெனி நான் உங்களோடு வருகிறேன் எனக் கூற செழியனோ அம்மாவுடன் போகக்கூடாது என ஜெனியை தடுக்கிறார், ஆனால் செழியனின் பேச்சை மீறி புறப்படுகிறார் ஜெனி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.