தொகுப்பாளினி பாவனா:

விஜய் டிவி தொலைக்காட்சியில், மாடர்ன் இங்கிலீஷை செம்ம ஸ்டைலிஷாக பேசி, ஒட்டு மொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், தொகுப்பாளினி பாவனா. சிரித்து சிரித்து இவர் காந்த குரலில் அழகாய் பேசினாலும், டிடி அளவிற்கு இவர் தன்னுடைய நடன திறமையை மேடைகளில் வெளிக்காட்டியது இல்லை.

மாஸ்டர் படம்:

கடந்த மாதம் வெளியிடப்பட்ட 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழாவை, தொகுப்பாளர் விஜய்யுடன் சேர்ந்து, தொகுத்து வழங்கிய இவர், தற்போது  மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங் பாடலுக்கு' செம்ம குத்து குத்தியுள்ளார்.

பாவனா நடனம்:

பரதநாட்டியத்தில் மூலம் பாவனா வாத்தி கம்மிங் பாடலுக்கு அவருடைய தோழி ஒருவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இவரின் நடன திறமையை பார்த்து வியர்ந்து பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பாவனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு:

பாவனாவின் இந்த வாத்தின் கம்மிங் பாடல் நடனம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வீடியோ இதோ: