Asianet News TamilAsianet News Tamil

எப்ப சார் படத்த ரிலீஸ் பண்ணுவீங்க... லோகேஷ் கனகராஜை துளைத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்... "தளபதி 64" புது அப்டேட்...!

முதலில் 20 நாட்கள் என திட்டமிடப்பட்ட டெல்லி ஷூட்டிங், தற்போது 40 நாட்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது காற்று மாசு காரணமாக படப்பிடிப்பு தாமதமானதால் பிப்ரவரி மாதத்தில் தான் ஷூட்டிங் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vijay Thalapathy 64 Movie Shooting Ends on February Month
Author
Chennai, First Published Nov 17, 2019, 1:13 PM IST

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே நாள்தோறும் படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கிறார். தளபதி-64 படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார்.

Vijay Thalapathy 64 Movie Shooting Ends on February Month
இந்தப் படத்தின் 2-வது கட்ட ஷுட்டிங், கடந்த நவம்பர் 1ம் தேதி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு விஜய்யின் பிரம்மாண்ட ஓபனிங் சாங் உள்ளிட்ட சீன்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் முதல் ஹீரோயின் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும், '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் 'தளபதி-64' படத்துக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாங்களே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளது. முதலில் 20 நாட்கள் என திட்டமிடப்பட்ட டெல்லி ஷூட்டிங், தற்போது 40 நாட்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது காற்று மாசு காரணமாக படப்பிடிப்பு தாமதமானதால் பிப்ரவரி மாதத்தில் தான் ஷூட்டிங் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vijay Thalapathy 64 Movie Shooting Ends on February Month

"தளபதி 64" படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் கழுத்தில் ஐ.டி. கார்டுடன் விஜய் ஷூட்டிங்கில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. படத்தின் வில்லனான விஜய் சேதுபதி மட்டும் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. மக்கள் செல்வன் அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவார் எனக்கூறப்படுகிறது. இதனால் ஷூட்டிங்கை முடிக்க மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஷூட்டிங்கை முடிந்தவுடன் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 2ம் கட்ட ஷூட்டிங்கே நிறைவு பெறாத நிலையில் "தளபதி 64" சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யப்படுமா என விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios