தமிழ் சினிமாவில்  'இளைய தளபதி விஜய்' நடிக்க துவங்கி  இத்துடன் 25  வருடம் ஆகிறது, அதே  போல் இசை புயல்' ஏ.ஆர். ரகுமானும்' இசையமைப்பாளராக  திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து  25 வருடம் ஆகிறது மேலும் ஸ்ரீ தேனாண்டாள் பட நிறுவனம் 'மெர்சல்' படத்தை தன்னுடைய 100 வது படமாக மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.  இந்த தருணத்தை  சிறப்பிக்கும் வகையிலும், நேற்று 'மெர்சல்' திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள், கலந்து கொண்டனர். மேலும் படத்தின் நாயகன் விஜய், மூன்று படங்களில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ள கதாநாயகிகள் காஜல் அகர்வால், மற்றும் சமந்தா ஆகியோரும் கலந்துக்கொண்டனர். மற்றொரு நாயகியான நித்தியமேனோன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் கலந்துக்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில், எப்போதும் போல விஜய் அனைவருக்கும் பிடித்த  ஒரு குட்டி கதை கூறினார். இந்த கதை தனக்கு மிகவும் பிடித்தது என்றும் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் இதை தான் படித்தாக கூறி கதையை சொல்ல துவங்கினார்.

அது என்ன கதை என்றால்... ஒரு மெக்கானிக் மருத்துவரின் காரை சரி பார்த்து கொடுத்தானாம். உடனே அந்த மெக்கானிக் மருத்துவரிடம் சென்று. டாக்டர் உங்களை போலவே தான் நானும் வேலை செய்கிறேன், நீங்கள் எப்படி மனிதர்களுக்கு உடல் நலம் இல்லை என்றால் மருந்து  போட்டு சரி செய்கிறீர்களோ அதே போல் நான் கார்களுக்கு சரி செய்கிறேன். என்னினும் உங்களுக்கு மட்டும் நிறைய சம்பளம் மரியாதை எல்லாம் கிடைக்கிறது எங்களுக்கு அப்படி இல்லையே என்று கேட்டானாம்.

உடனே அதற்கு அந்த மருத்துவர், நீ ஓடும் காரில் இதை எல்லாம் செய்யமுடியுமா..? என்று கேட்டாராம். இந்த கதையை கூறிய விஜய் இந்த கதையின் அர்த்தம் உங்களுக்கே  தெரியும்  என நம்புவதாக கூறினார் ரசிகர்களிடம்.