இளைய தளபதி விஜய் நடித்த பைரவா படம் நேற்று வெளியாகியது, இதனை விஜய் ரசிகர்கள் டபுள் பொங்கல் கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்சியல் பண்புகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதால் மாஸ் படமாக கொண்டாடி வருகின்றனர்.
 
அதே போல் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கும் பைரவா படம்  பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் பைரவாபடத்தை  சிறப்பிக்கும் விதமாக தேனியில் ரசிகர்கள் ஒன்று கூடி விஜயின் 6 அடி முழு சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் பலர் வேகமாக ஷேர் செய்து விஜயின் கெத்தை காட்டி வருகின்றனர் .

ஆனால் இது ஒருசிலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, காரணம் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க லட்ச கணக்கான பலர் போராடி கொண்டு வரும் நிலையில் சிலை திறப்பது முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளனர் .