vijay son got convocation in international school

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். 

கோலிவுட் ரசிகர்கள் எப்படி விஜயை ரசிகின்றனரோ அதே போல், இவருடைய பிள்ளைகள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அதையும் வைரலாக்கி விடுவார்கள். 

இந்நிலையில் தற்போது இளைய தளபதி விஜயின் மகன் சஞ்சய் மற்றும் ஷாசா இருவரும் இடம்பெற்றுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

விஜயின் மகன் சஞ்சய் சென்னையில் இருக்கும் 'அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளியில் தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ள அவர். பட்டம் பெரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சகோதரர் சஞ்சையுடன், விஜயின் மகள் ஷாசாவும் இடம் பெற்றிருக்கிறார். இவர் தான் தன்னுடைய சகோதரர் பட்டம் பெறுவதற்கு முன் மாலை அனுவிப்பது அவரை பட்டம் பெற அனுப்பி வைக்கிறார். 

ஏற்கனவே கடந்த சில மாதத்திற்கு முன்பு, தன்னுடைய மகள் கலந்துக்கொண்ட விளையாட்டு போட்டியை பெற்றோர்களுடன் இணைத்து விஜயும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…