பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அவருடைய 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாக கூறப்படுகிறது.

பைரவா படம் வெளிவந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாக அட்லீ கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதன் மூலம் குஷி என்கிற படம்தில் விஜயை மேலும் மெருகேற்றியவர் எஸ். ஜே. சூர்யா, இவர் இயக்கத்தில் நடித்த குஷி படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால்,போன்ற நடிகைகளும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

.