vijay shooting spot interesting news

இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்பவர். இவரின் அடுத்தப்படமான விஜய்-61 படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்திற்காக ஒரு பாடலை கவிஞர் விவேக் சமீபத்தில் எழுதி எடுத்துக்கொண்டு ,விஜயை பார்க்க படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஒரு வேலை செய்த சிறுவன் படப்பிடிப்பை முடிந்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளான், அந்த சிறுவனை கவனித்த விஜய், அவனது அருகில் சென்று ஏன் தம்பி கண்கள் சிவந்துள்ளது, அழுதாயா என கேட்டுள்ளார். 

அதற்கு அவன் ‘உங்கள் எல்லோரையும் விட்டு செல்கிறேன், அதனால் தான்’ என கூற விஜய் உடனே ‘அட எப்ப வேண்டுமானாலும் வாங்க நண்பா, என அந்த சிறுவனை கட்டி பிடித்து சமாதானம் செய்து...

இது நம்ம குடும்பம், உனக்கு எப்போது என்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ வந்துவிடு’ என ஆறுதல் கூறி அனுப்பியதாக, கவிஞர் விவேக் கூறியுள்ளார்.