vijay sethupathy controversial speech in kee audio launch
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் காலிஸ், இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ரானி நடிக்கும் கீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால், விஜய் சேதுபதி, இயக்குநர் காலிஸ், நிக்கி கல்ரானி தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது 'வல்லவன்' பட தயாரிப்பாளரான தேனப்பன் பேசும் போது சிம்புவின் மீது மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்தும் சிம்பு மீது விஷால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


சினிமாக்காரர்களை குறை சொல்பவர்கள் ஒருதடவை வந்து சினிமா எடுத்து பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்சனை அப்போதுதான் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும் போது உயிர் போய் உயிர் வருகிறது.
படம் எடுக்க முயற்சிக்கும் தயாரிப்பாளர்களை நாம் பாராட்ட வேண்டும். அந்த படம் ஓடவில்லையென்றால் அவருக்குத்தான் அதிக பாதிப்பு.
நான்கு படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வர மாட்டார்கள். நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்தி பேசினாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். படம் வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் மதிப்பு.

"பவர்" வைத்துதான் இங்கு மரியாதை. அதுவும் போய் விட்டால், நாம் சோர்ந்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னொருவன் வருவான். அப்புறம் நாம் நக்கிட்டுத்தான் போகணும். நான் அனுபவத்தில், அறிவில் சின்ன பையன் தப்பாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பேசி முடித்தார்.
