Asianet News TamilAsianet News Tamil

Katrina Kaif: மெர்ரி கிறிஸ்துமஸ் ஆரம்பம்... திருமணம் முடிந்த கையோடு பிரபல தமிழ் நடிகருடன் இணையும் கத்ரீனா கைப்

மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். 

Vijay Sethupathi to start shoot for Merry Christmas with Katrina Kaif
Author
Tamil Nadu, First Published Dec 3, 2021, 4:43 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் இவர் கைவசம் கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், மைக்கேல், விக்ரம், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi to start shoot for Merry Christmas with Katrina Kaif

குறிப்பாக இந்தியில் மும்பைகார், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் மும்பைகார் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும். 

இவர் நடிக்கும் மற்றொரு இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இப்படத்தை அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். கடந்த ஆண்டே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை தொடங்காமல் இருந்தனர்.

Vijay Sethupathi to start shoot for Merry Christmas with Katrina Kaif

இந்நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 15-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. நடிகை கத்ரீனா கைப்பிற்கு 7-ம் தேதி பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் உடன் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண கொண்டாட்டங்கள் 2, 3 நாட்களுக்கு இருக்குமாம். அவை முடிந்ததும் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios