'கைதி' பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் "தளபதி 64" படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் டெல்லியில் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதையடுத்து கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் 4ம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் எப்போ, எப்போ என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் சேதுபதி இன்று முதல் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். 

நேற்று சிவமோகா சென்றடைந்த விஜய்சேதுபதி, இன்று காலை முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக சிவமோகாவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிறை செட்டில், விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். 

இம்மாத இறுதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் மெயின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், மற்றொரு வில்லனாக "கைதி" படத்தில் நடித்த அர்ஜூன் தாஸும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.