நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ஜுங்கா. இந்த படத்தில் நடிகை சாயிஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்நிலையில் இந்த படம் குறித்து தெரிவித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி, 'ஜுங்கா திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நான் கஞ்சத்தனமான தாதாவாக நடித்துள்ளேன், இந்த படம் கண்டிப்பாக குடும்பத்தோடு சிரித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் ஒரு சில வார்த்தைகள் பேசினார். இதை தொடர்ந்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரஜினிகாந்துடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது 'ரஜினியின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் ஒரு மாணவனாக நான் இருக்கிறேன் என கூறினார்.

இதைதொடர்ந்து சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி வைப்பது குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து பேசிய இவர், புகைப்பிடிப்பது தவறு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கதாப்பாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அந்த காட்சிக்கு அது தேவை பட்டால் வைத்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.