vijay sethupathi support mersal

மெர்சல் படத்தில் இடம் பெற்ற GST குறித்த வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறி, பாஜக.,வினர் கொளுத்திப் போட்ட பிரச்னை தற்போது மிகப் பெரிய அளவில் பேசும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற எந்த ஒரு காட்சியையும் நீக்கக் கூடாது என பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் மெர்சலுக்கு வந்துள்ள பிரச்சனை பற்றி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள், இது மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் என்று கூறியுள்ளார்.