Asianet News TamilAsianet News Tamil

விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' சென்சார் தகவல்!

நவீன ராமாயண கதையை அதிரடி ஆக்ஷன் படமாக இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள திரைப்படம் சிந்துபாத்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும்,  நடிகை அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
 

vijay sethupathi sindhubath movie
Author
Chennai, First Published Jun 18, 2019, 6:33 PM IST

நவீன ராமாயண கதையை அதிரடி ஆக்ஷன் படமாக இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள திரைப்படம் சிந்துபாத்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும்,  நடிகை அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதி மகன் சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு,  விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  

vijay sethupathi sindhubath movie

இந்த படத்தை சேதுபதி படத்தை தயாரித்த கே புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்நிலையில் இந்த படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  

vijay sethupathi sindhubath movie

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.  இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.  இதையடுத்து  இந்த படம் 21 ஆம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios