ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்த விஜய் சேதுபதிக்கு சமீப காலமாக வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன. 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி (Vijay sethupathi). வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், விடுதலை (Viduthalai), இடம் பொருள் ஏவல், விக்ரம், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார், காந்தி டாக்ஸ் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

நடிகர் விஜய் சேதுபதிக்கு சமீப காலமாக வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி (Vijay sethupathi). தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் (Vikram) படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு மேலும் ஒரு தமிழ் படத்தில் வில்லனாக நடிக்க சான்ஸ் கிடைத்ததுள்ளது. அதன்படி குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் அடுத்ததாக கார்த்தியுடன் (Karthi) இணைய உள்ள படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay sethupathi) வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.