கடந்த இரண்டு மாதத்திற்குள் விஜய் சேதுபதியின், மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை குவித்துள்ளது.
அதே போல் சென்னை சத்தியம் தியேட்டரில், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, ரெக்க என மூன்று படங்களும் திரையிட பட்டு வருகிறது, இதற்கு முன் எந்த நடிகருடைய படமும் இப்படி ஓடியது இல்லை, அதனால் இதை சாதனையாகவே நினைக்கின்றனர் திரையுலகத்தினர்.
இந்நிலையில் சீனுராமிசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இன்னொரு படமான 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் ஒருசில பொருளாதார பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில்ற் தற்போது தெரிவித்துள்ளார்.
அனேகமாக 'றெக்க' படத்திற்கு அடுத்த படமாக விஜய்சேதுபதிக்கு இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
