'வாகை சூடவா' படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் இனியா.  மலையாளம் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் 'காபி' திரைப்படம், தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறார் இனியா.

இதுபற்றி அவர் கூறுகையில்... 'காபி' படத்தில் சத்தியபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். என் திறமையை நிரூபிக்க, இந்த படம் ஒரு வாய்ப்பாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம்  இது, அடுத்த கட்டத்துக்கு போகக்கூடிய வலுவான படமாக தனக்கு இப்படம் அமையும் என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, நடித்த 'மாமனிதன்', 'சிந்துபாத்' ஆகிய இரண்டு படங்கள் முடிவடைந்துவிட்டது. இரண்டு படங்களுமே திரைக்கு வர தயாராக உள்ளன. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து அவர் ஷிபுதமீன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஷிபுதமீன் ஏற்கனவே விஜயை வைத்து புலி, விக்ரமை வைத்து சாமி 2, ஆகிய படங்களை தயாரித்தவர்.  அடுத்து விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க, இரண்டு முறை சந்தித்துப் பேசியதால், ஒரு வழியாக,   விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.