லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.  கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர்  ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக தளபதி விஜய் மாஸ் ஸ்டெப் போட்ட வாத்தி கம்மிங் பாடல் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும், விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலயில் இந்த படம் குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் மாஸ் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின், சிறு வயது வேடத்தில்... மாஸ்டர் மஹேந்திரன் நடித்துள்ளாராம். குரலில் கூட விஜய் சேர்த்துபதி என ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என, மஹேந்திரனுக்கும் விஜய் சேதுபதி தான் டப்பிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.