சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த திரைப்படம் தர்மதுரை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படம் இதுவரை விஜய் சேதுபதி நடித்ததிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது இந்த படத்தின் 100வது நாள் வெற்றிவிழா, சென்னையில் அமைந்துள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஆர் .கே.சுரேஷ் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, புது கெட்டப்பில் வந்து பலரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளார், அந்த அளவிற்கு இந்த புது கெட்டப் அவருக்கு பொறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் சேதுபதி, ஒரு ஒரு பாதத்திலும் தனது கெட்டபில் வித்தியாசம் காட்டி வருகிறார், அதற்கு காரணம் பலர் நீங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என கூற அந்த பெயரை மாற்ற தான் விஜய் சேதுபதி இந்த முயற்சியை கையாளுவதாக கூறப்படுகிறது.