மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அடுக்கடுக்காக பல படங்களின் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ஸ்ருதிஹாசன் ரீ - என்ட்ரி ஆகியுள்ள திரைப்படமான 'லாபம்' படத்தில், முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய தகவல், இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர் படக்குழுவினர்.

அதன்படி, தற்போது வெளியாகியுள்ள தகவலில் கூறியுள்ளதாவது, ஆகஸ்ட் 22 தேதி, அதாவது நாளை மறுநாள், மாலை 5 மணி அளவில் 'லாபம்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தெரிவித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன், இந்த படத்தை இயக்கி உள்ளார். விவசாயிகள் பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கும்... வியாபாரிகளுக்கும் இடையே செயல்படும் இடை தரகர்கள் எப்படி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் என்பதை தான் இந்த படம் விவரித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ.ரணசிங்கம், மாஸ்டர், என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…