தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கயிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக இருந்த போதிலும் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனைதை கவர்வதில் வல்லவர்.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 151-வது படமான “சைரா நரசிம்ஹா ரெட்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜகபதி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட நரசிம்ஹா ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இதில், நரசிம்ஹா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது இப்படத்தில் சிரஞ்சீவிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கயிருக்கிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார் என்பது கொசுறு தகவல்.