விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர். வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இவருடைய மகன் சூர்யாவும் 'நானும் ரவுடிதான்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள,  'சிந்துபாத்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சூர்யாவை தொடர்ந்து விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும்  விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.