விஜய் சேதுபதி அவருடைய மகன் சூர்யாவுடன், சண்டை போடும் காட்சி ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சிந்துபாத்'. ப்ரீ ப்ரொடக்ஷான் பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷான் பணிகளும் நிறைவு பெரும் தருணத்தில் உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது. மேலும் இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைத்து அவருடைய மகன் சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது, விஜய் சேதுபதி அவருடைய மகன் சூர்யாவிடம் சண்டை போட்டு, முடியை பிடித்து வெளுத்து வாங்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்திலிருந்து சிறு காட்சி ஒன்று தற்போது கசிந்து ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.