நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்துவிட்ட போதிலும், ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கி வருகிறார். அதிலும், 'பேட்ட' படத்திற்கு பின், வில்லன் வாய்ப்புகள் அதிகமாகவே வருகிறது.

அந்த வகையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் தமிழில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

தமிழை தவிர தெலுங்கு படங்களிலும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே நடிகர் சிரஞ்சீவி நடித்த 'சயிரா நரசிம்மா ரெட்டி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் 20 ஆவது படமாக உருவாக உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை சுகுமார் என்கிற இயக்குனர் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதிக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்க, விஜய்சேதுபதி கோடிகளில் சம்பளத்தை அல்லி வருகிறார். இது அவருக்கு அடித்த ஜாக்பார்ட் என்றே கூறலாம்.