நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து  உச்சம் தொட்ட நடிகராக மாறிவிட்டார். ரசிகர்களும் இவரை 'மக்கள் செல்வன்' என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் தொடர்ந்து அவருடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான 'சீதக்காதி'  படத்தில் கூட இவருடைய வேடம் அனைவரையும் கவர்ந்தது.  ஆனால் இந்த படத்தில் இவருடைய காட்சிகள் அதிகமாக இல்லாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில்  வெளியாக உள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.  இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  படத்துக்கு படம் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார். 

மேலும் விஜய் சேதுபதி ரசிகர்கள், இதை 'பாட்ஷா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆட்டோ டிரைவர் வேடத்துடன் ஒப்பிட்டு இந்த தகவலை வைரலாகி வருகிறார்கள்.