இந்த ஆண்டில் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 6 திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் அவர் நடித்த 'புரியாத புதிர்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் 'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
