திரையுலகில் வளர்ந்த நடிகர்கள் பெரும்பாலும், மற்ற நடிகர்கள் பேசி நடித்த டயலாக்கை பேட்டிகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ பேசுவதை தவிர்ப்பார்கள். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி, எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர் என்றே கூறலாம்.

அந்த வகையில் விஜய் சேதுபதி, தற்போது தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளியான 'சர்கார்' படத்தில் வரும் மாஸ் பஞ்ச் டயலாக் பேசி ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிரபல தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய திரை அனுபவம் குறித்தும் தற்போது சந்தித்து வரும் ஸ்வாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். 

அப்போது தொகுப்பாளர், விஜய் சேதுபதியிடம் உங்களை பற்றிய கிசு கிசு உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் எதை சொல்வீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு விஜய் சேதுபதி மிகவும் கூலாக  "ஐ ஏம் எ கார்ப்பரேட் கிரிமினல்' என விஜய் ஸ்டைலில் பேசி இந்த கேள்வியில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.