Asianet News TamilAsianet News Tamil

தென்னிந்திய நடிகர்களை விழி பிதுங்க வைத்த வியாபாரம்!! மெர்சலா தெறிக்கவிடும் பிகிலு விஜய்...

காப்பி பேஸ்ட் இயக்குனர் அட்லீ பல உதவி இறக்குனர்களின் கதையை ஆட்டையைப்போட்டு, பட்டி டிங்கரிங் பார்த்து விஜய் நடிப்பில் இயக்கிவரும் பிகில் படத்தின் வியாபாரம் கோலிவுட்டை வாய் பிளக்க வைத்துள்ளது.

Vijay's popularity takes giant leap; Bigil set to earn biggest amount before release
Author
Chennai, First Published Jul 3, 2019, 5:18 PM IST

காப்பி பேஸ்ட் இயக்குனர் அட்லீ பல உதவி இறக்குனர்களின் கதையை ஆட்டையைப்போட்டு, பட்டி டிங்கரிங் பார்த்து விஜய் நடிப்பில் இயக்கிவரும் பிகில் படத்தின் வியாபாரம் கோலிவுட்டை வாய் பிளக்க வைத்துள்ளது.

பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ, யுனைட்டடு இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன. தமிழக தியேட்டர் உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டுதீபாவளிக்கு  ரிலீஸ் ஆன சர்கார் படம் ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றநிலையில் பிகில் படத்திற்கான வியாபாரம் தாறுமாறாக எகிறியுள்ளது. அதாவது படத்தின் உரிமைகள் எவ்வளவு விலைக்கு விற்பனையாகியுள்ளன என்று சில தகவல்கள் லீக் ஆகியுள்ளது. அது என்னன்னா? ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு 70 கோடி ரூபாய்க்கு தமிழக உரிமை விற்பனையாகியுள்ளது.

Vijay's popularity takes giant leap; Bigil set to earn biggest amount before release

"சர்கார்" படத்திற்கு அதிமுக எதிர்ப்பும் படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. அதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 71 கோடி ரூபாயை வசூலித்த நிலையில் இந்த படம் 70 கோடி ரூபாய் தயாரிப்பு தரப்பு விலை நிர்ணயித்துள்ளது.  இதற்காக ஸ்கிரீன் சீன் நிறுவனம் 30 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளது. அதாவது தமிழக விநியோகப் பகுதிகளில் சுமார் 90 கோடி ரூபாய் வரை விற்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பட உரிமையை 11 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.  

இது போக, இந்தி உரிமை 30 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 22 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளது. மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 46 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 3.5 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன. பிகில் பட வேலைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் சுமார் 171.5 கோடி படம் விற்பனையாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios