vijay reject the trafic ramasamy movie

சமூக அக்கறையோடு தற்போது வரை பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வருபவர் டிராபிக் ராமசாமி. இவரின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், டிராபிக் ராமசாமி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இவருக்கு மனைவியாக நடிகை ரோகினி நடிக்கிறார். 

இந்த படத்தை எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் விக்கி என்பவர் இயக்கி வருகிறார். 

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகை அம்பிகா, இமான் அண்ணாச்சி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதே போல் கௌரவ வேடத்தில் சீமான், குஷ்பு, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜயை நடிக்க கூறி அவருடைய அப்பா எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு விஜய் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

பின் அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை இயக்குனர் அணுகினாராம். உடனே ஒப்புக்கொண்டு இந்த படத்தை நடித்து கொடுத்த விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூட வாங்கவில்லையாம்.