vijay reject his favourite director atlee next

என்னதால் இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தாலும் இரண்டுமே பழைய படங்களின் தழுவலாக இருப்பதால் விஜய்க்கே ஒரு சலிப்பை உண்டாக்கியதால் தனது ஆஸ்தான இயக்குனரான அட்லீயை கழட்டி விட்டதால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

என்னதாம் முதல் மூன்று படங்களும் பழைய படங்களின் தழுவல் என சொன்னாலும், விஜய் அட்லீ கூட்டணி மிகவும் ராசியான கூட்டணி என ரசிகர்கள் நினைத்திருந்தனர். இந்த கூட்டணி மீண்டும் சேரும் என்று ஆவோளோடு இருந்தனர் அனால் எல்லோருக்கும் ஏமாற்றம் இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை அட்லீக்கும் தான்.

ராஜா ராணி படத்தை அடுத்து, விஜயை வைத்து இயக்கிய ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அதோடு வசூலில் மாபெரும் சாதனை பெற்றது இரண்டும் நூறுகோடி பட்டியலில் இடம் பிடித்தது இதையடுத்து அவர் மீண்டும் விஜயுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகக தொடங்கியுள்ளார்.

இது அவரது 62 வது படமாகும், இப்படம் முடிந்த பிறகு அட்லீயுடன் விஜய் இணைவார் என்று கூறிவந்த நிலையில், விஜய் தனது 63 வது படத்திற்கு வேறு ஒரு இயக்குநரை ஒகே செய்திருப்பதாக கூறப்பட்டுகிறது. தனது நான்காவது படம் விஜயுடன் தான் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த அட்லீக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தளபதி கொடுத்த இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் அவர் ஆந்திர சினிமா பக்கம் செல்ல முடிவு செய்திருந்தவருக்கு பிரபாஸ் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது சுத்தமான பொய் தகவல் என தெரிய வந்தது.

இந்த நிலையில், மெர்சல் படத்தை பார்த்த ரஜினிகாந்த், அடுத்ததாக இவருக்காக கதை பண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியதாகவும், அந்த கதை ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், தற்போது அந்த கதையின் திரைக்கதை அமைப்பில் அட்லீ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீ ரஜினி இணையும் படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் ’காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அதன் பிறகு அவர் அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளதால், படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம் அல்லது ஒரே ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.