இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர், கோவப்பட மாட்டார் என்று தான் தெரியும். ஆனால், அவருக்குள் செம்ம ஜாலியான ஒரு கேரக்ட்டரும் உள்ளது.

இதை அவருடன் நெருங்கி பழகியவருக்கே தெரியும், அந்த வகையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் சாருடன் விரைவில் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும்.என விஜய் முன்பே கூறியிருந்தார்.

அதற்கு விஜய் நான் உங்கள் படத்தில் நடிப்பதாக இருந்தால் ப்ரேம்ஜி இருக்க கூடாது. என சொன்னாராம்.

ஏனென்றால் அவன் தல ஆளு’ என ஜாலியாக கூறி செம்ம கலாட்டா செய்தாராம். பிறகு ப்ரேம்ஜி ‘சார் ஏற்கனவே உங்க பேன்ஸ் எல்லாம் என்னைய கலாய்க்கிறாங்க, நான் நடித்தே தீருவேன்’ என்று கூறினாராம்.

இதை வைத்து பார்கும்போது மிக விரைவில் வெங்கட்பிரபுவுடன் விஜய் இணைத்து பணியாற்றுவார் என தெரிகிறது.