சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று இளையதளபதி விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படம் வெளிவராதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில் நடந்தது. இதே பிலிம்சிட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த விஜய் அவரை நேரில் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் புகைப்படம் எடுக்க படக்குழுவினர் அனுமதிக்கவில்லை என்றும் இதனால் ரஜினி-விஜய் சந்திப்பின் புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.